1.யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது?
அகநானூறு
2.அகநூல்களில் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் எது?
அகநானூறு (அல்லது) நெடுந்தொகை
3.தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள்?
அகநானூறு, ஐங்குறுநூறு
4.அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது?
13 அடி முதல் 31 அடி வரை
5.நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் எது?
அகநானூறு
6.அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் -
களியாற்றினை நிரை
7.அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் என்ன?
நெடுந்தொகை
8.அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை
9.அகநானூற்றில் 10,20,3040 போல 0,என முடியும் திணைப்பாடல்கள் -
நெய்தல்திணை
10.அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை
11.அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை
12.அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் -
மருதத்திணை
13.அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் -
நோய்பாடியார், ஊட்டியார்
14.அகநானூற்றின் முதல் பகுதி -
களிற்றுயானை நிரை
15.அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் -
வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை
16. அகநானூறு நூலைத் தொகுத்தவர்- மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்தவர் மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
17.அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை? -
3 பிரிவுகள் களிற்றுயானைநிரை(01-,120) மணிமிடைப்பவளம் (121-300) நித்திலக்கோவை(301-400)
18.அகநானூற்றின் இரண்டாம் பகுதி -
மணிமிடைப்பவளம்
19.அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வே.இராசகோபால்
20.அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக