Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

திரிகடுகம் பற்றிய செய்திகள்

 

ஆசிரியர் குறிப்பு :- 

💥திரிகடுகம் நூலின் ஆசிரியர்- நல்லாதனார் 


💥நல்லாதனார் திருநெல்வேலி மாவட்டம் திருத்து எனும் ஊரை சேர்ந்தவர். 


💥செருஅடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 


💥இவர் திருமலை வழிபட்டதால் வைணவ சமயத்தை சார்ந்தவர். 


💥திரிகடுகம் நூலில் நூறு பாடல்கள் உள்ளன. 


💥பாவகை-வெண்பா 


💥திரிகடுகம் பெயர் வர காரணம் சுக்கு, மிளகு,  திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பன. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் மக்களின் மன மயக்கத்தை போக்கி தெளிவை ஏற்படுத்தும். 


💥திரி என்றால் மூன்று என்று பொருள், கடுகம் என்றால் காரமான பொருள் என்று அர்த்தம். 


💥திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி என திவாகர நிகண்டு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...