Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

தமிழ் சங்கம் பற்றிய முக்கிய வினாக்கள்



1.சங்கம் மூன்று வகைப்படும் - அவை முதற்சங்கம், இடைச்சங்கம்,கடைச்சங்கம்


2. முதற்சங்கம் அமைந்திருந்த இடம் -  தென்மதுரை


3. முதற்சங்கத்தைத் தோற்றுவித்தவர் - காய்சினவழுதி என்னும் பாண்டியன்


4. முதற்சங்கத்தை ஆதரித்த அரசர்கள் -  காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்


5. முதற்சங்கம் நிலைத்திருந்த ஆண்டுகள் -  4449


6. முதற்சங்கத்தில் தமிழாய்ந்த புலவர்கள் - 4449


7. முதற்சங்கத்தில் தோன்றிய நூல்கள் -  அகத்தியம், முதுநாரை,முதுகுருகு, களரியாவிரை,பெரும்பரிபாடல்


8. முதற்சங்கத்தில் வீற்றிருந்த முதன்மையான புலவர்கள் - அகத்தியர்,  சிவபெருமான்,முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் முதலிய 549 பேர்


9. சங்கம் பற்றிய குறிப்பு முதன் முதலில் எச்சான்று மூலம் கிடைக்கின்றது - கி.பி. 7ம் நூற்றாண்டு.திருநாவுக்கரசரின் தேவாரத்தில் ‘நன்பாட்டுப் புலவனாயச் சங்கம் ஏறி” என்னும் வரி மூலம்


10. இடைச்சங்கம் அமைந்திருந்த இடம் - கபாடபுரம்


11. இடைச்சங்கத்தை நிறுவியவர் பெயர் - வெண்டர்செழியன்


12. இடைச்சங்கத்தை காத்த அரசர்கள் - வெண்டர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை உள்ள 59 பேர்


13. இடைச்சங்கம் நிலைத்திருந்த ஆண்டுகள் - 3700 ஆண்டுகள்


14. இடைச்சங்கத்தில் தமிழாய்ந்த புலவர்கள் -  3700 பேர்


15. இடைச்சங்கத்தில் தோன்றிய நூல்கள் யாவை- பெருங்கலி,பெருங்குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகத்தியம்,தொல்காப்பியம், மாபுராணம்,பூதபுராணம்,இசை நுணுக்கம்


16. இடைச்சங்கத்தில் வீற்றிருந்த சிறப்புப் புலவர்கள் - அகத்தியர், தொல்காப்பியர், மோசி.வெளர்க்காப்பியனார், சிறுபாண்டரங்கன், திரையன்மாறன், கீரந்தை முதலிய 59 பேர்


17. இடைச்சங்கம் மறைந்தது எப்படி - கடற்கோளுக்குச் சங்கமுகம், பாடபுரமும் இரையாயிற்று


18. கடைச்சங்கம் அமைத்திருந்த இடம் -தற்போதைய மதுரை (வடமதுரை)


19. கடைச்சங்கத்தை நிறுவியவர் - முடத்திருமாறன்


20. கடைச்சங்கத்தை காத்த அரசர்கள் - முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர்


21. கடைச்சங்கம் நிலைத்திருந்த ஆண்டுகள் - 1850 ஆண்டுகள்


22. கடைச்சங்கத்தில் தமிழாய்ந்த புலவர்கள் - 449 பேர்


23. கடைச்சங்கத்தில் பாடப்பட்ட நூல்கள் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு


24. கடைச்சங்கத்தில் இருந்த முதன்மைபுலவர்கள் - சிறுமேதாவியார், சேந்த பூதனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிளநாகனார், நக்கீரனார் முதலிய 49 பேர்


25. தற்போதைய தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர் -பாண்டியத்துரைதேவர்


26. தற்போதைய(நான்காம்) தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 14.09.1901


27. சங்கங்களைப்பற்றி முழுமையாகக் கூறும் நூல் - இறையனார் களவியலுரை

 

28.முச்சங்கங்களிலும்அரங்கேறியதாகக் கூறப்படும் நூல் - அகத்தியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...