1.இயற்கையில் காணப்படும் கரைசல் எது?கடல் நீர்
2.காற்று எத்தகையது?ஒரு கரைசல் (ஒரு படித்தான கலவை )
3.மனித உடலில் உள்ள பெரும்பான்மையான கரைசல்கள் எவை?இரத்தம் ,நிணநீர் ,சிறுநீர்
4.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை எவ்வாறு அழைக்கப்படும்? கரைசல்
5.ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை)கொண்ட கூறு எது?கரைபொருள்
6.ஒரு கரைசலில் அதிக அளவு எடை கொண்ட கூறு எது? கரைப்பான்
7.கரைத்தல் என்றால் என்ன?ஒரு கரைப்பானில் கரைபொருளானது கரைவது
8.ஒரு கரைபொருளையும்,ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் _________ இருமடி கரைசல்
9.ஒரு கரைப்பானில் இரு கரைபொருள்கள் கரைக்கப்பட்டிருக்கும் கரைசல் _________ மும்மடி கரைசல்
10.உலகளாவிய கரைப்பான் (அ )சர்வ கரைப்பான் எது?நீர்
11.நீரில் கரையாத பொருட்களை எந்த கரைப்பானில் கரைக்கலாம்? ஈதர்கள்,பென்சீன்,ஆல்கஹால்கள்
12.கரைப்பானை அடிப்படையாகக் கொண்டு கரைசல்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?இரண்டு (i. நீர் கரைசல் எடுத்துக்காட்டு நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்)(ii .நீரற்ற கரைசல் எடுத்துக்காட்டு கார்பன்-டை-சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர் ,கார்பன் டெட்ரா குளோரைடில் கரைக்கப்பட்ட அயோடின்)
13.கரைபொருளின் வகையை பொறுத்து கரைசல்களை எவ்வாறு வகைபடுத்தலாம்?தெவிட்டிய கரைசல், தெவிட்டாத கரைசல்,அதி தெவிட்டிய கரைசல்
14.ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ அந்த கரைசல் ______ எனப்படும்?தெவிட்டிய கரைசல்
15.தெவிட்டிய கரைசலுக்கு எடுத்துக்காட்டு என்ன ? 25டிகிரி யில் 100கிராம் நீரில் 36கி NaCl கரைசல்
16. எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதற்கான அளவீடு என்ன?கரைத்திறன்
17.கரைத்திறன் காண உதவும் சமன்பாடு என்ன?கரைபொருளின் நிறை /கரைப்பானின் நிறை *100
18.கரைபொருளின் கரை திறனை தீர்மானிக்கும் காரணிகள் எவை?மூன்று கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை, வெப்பநிலை ,அழுத்தம்
19.ஹென்றியின் விதி எதனை விளக்குகிறது? திரவத்தில் வாயுவின் கரைத்திறனில் அழுத்தத்தின் விளைவு
20.கரைசலின் செறிவு என்பது என்ன? கொடுக்கப்பட்ட கரைசலில் அல்லது நிறையை கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு
21.நிறை சதவீதம் என்பது என்ன? கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறிப்பது
22.நிறை சதவீதத்திற்கான சமன்பாடு என்ன? கரைபொருளின் நிறை கரைசலின் நிறை X 100(அ) w w
23.கன அளவு சதவீதம் என்பது என்ன? கரைசலில் உள்ள கரைபொருளின் கன அளவை சதவீதத்தால் குறித்தல்
24.கன அளவு சதவீதத்தின் சமன்பாடு என்ன? கரைபொருளின் கன அளவு கரைசலின் கன அளவு
25.காப்பர் சல்பேட் உப்பு நீரில் சேர்க்கும் போது (அ) குளிர்விக்கும் போது என்ன நிறமாக மாறுகிறது? நீலம்
26.எப்சம் உப்பின் படிக்கமாக்கல் நீர் மூலக்கூறின் எண்ணிக்கை என்ன? 7
27எப்சம் உப்பை வெப்பப்படுத்தும் போது என்னவாக மாறுகிறது? நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக
28.ஈரம் உறுஞ்சிக் கரைதல் அதிகமாக இருக்கும் சூழ்நிலைகள் எவை? குறைந்த வெப்பநிலை, அதிக வளிமண்டல ஈரப்பதம்
29.ஈரம் உறுஞ்சி கரைத்தலுக்கு எ.கா எவை? கால்சியம் குளோரைடு (Caclz), சோடியம் ஹைராக்ஸைடு (NaOH), பொட்டாசியம் ஹைராக்ஸைடு (KOH), பெர்ரிக் குளோரைடு (Fecly)
30.முனைவுறும் சேர்மங்கள் எவற்றில் கரையும்? முனையுறும் கரைப்பானில்
31.முனையுறாச் சேர்மங்கள் எவற்றில் கரையும்? முனையுறாக் கரைப்பானில்
32.வெப்பம் கொள் செயல்முறையில் வெப்பநிலை அதிகரித்தால் கரைத்திறன் என்னவாகும்? அதிகரிக்கும்
33.வெப்பம் உமிழ் செயல்முறையில் வெப்பநிலை அதிகரித்தால் கரைத்திறன் என்னவாகும்? குறையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக