Followers

திங்கள், 5 ஏப்ரல், 2021

10th STANDARD LESSION -7 IMPORTANT QUESTIONS


 வேதியியல் 7)அணுக்களும் மூலக்கூறுகளும் 

1.அணுவை பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர் யார்? ஜான் டால்டன் 

2.டால்டனின் கோட்பாடுகளில் உள்ள தவறுகள்  எந்த அறிஞர்களால் கண்டறியப்பட்டது?ஜே .ஜே தாம்சன்,ரூதர்போர்டு ,நீல்ஸ்போர் ஷிரோடிஞ்சர்

3.டால்டனின் கோட்பாட்டின் குறைபாடுகள் நீக்கப்பட்டு எந்த கோட்பாடு முன்மொழியப்பட்டது? நவீன அணுக்கொள்கை 

4.வெவ்வேறு அணு நிறைகளை பெற்றுள்ள ஒரு தனிமத்தின் அணுக்கள் (or)ஒத்த அணு எண்கள்,வேறுபட்ட நிறை எண்கள் கொண்ட ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள்_________ எனப்படும். ஐசோடோப்புகள்   

5.ஐசோடோப்புகளுக்கு எடுத்துக்காட்டு தருக. 17Cl 35,17Cl 37

6.வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறையை பெற்றிருப்பது (or )ஒத்த நிறை எண்கள் வேறுபட்ட அணு எண்கள் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படும் ? ஐசோபர்கள் 

7.ஐசோபர்களுக்கு எடுத்துக்காட்டு தருக ? 18Ar40,18Ca40

8.ஒரே நியூட்ரான்கள் எண்ணிக்கையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ______ எனப்படும் ஐசோடோன்கள் 

9.ஐசோடோன்கள் எடுத்துக்காட்டு தருக? 6C13

10.வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் எது? அணு 

11.அனுவின் ஆற்றலை எதிலிருந்து கணக்கிட முடியும்?அனுவின் நிறையிலிருந்து E=mc 

12.நிறை,பருமனை பெற்றுள்ள பொருள்________ எனப்படும்.பருப்பொருள் 

13.பருப்பொருளின் அடிப்படை துகள் என்ன? அணு 

14.ஒரு அணுவின் நிறைக்கு காரணமான அணு துகள் எவை? புரோட்டான்களும்,நியூட்ரான்களும் 

15.உட்கருவில் உள்ள புரோட்டான்கள்,நியூட்ரான்களின் கூடுதல் _______ அழைக்கப்படும். அணுவின் நிறை எண் 

16.அணுவின் நிறை எண்ணை ________ எனவும் அழைக்கலாம்? நிறை எண்,அணுநிறை 

17. அணுவின் நிறை எண் எந்த அலகால் அளக்கப்படுகிறது? அணுநிறை அலகு (amu -automic mass unit )

18.கார்பனின் அணு நிறை என்ன? 12 (6 புரோட்டான்களும்,6 நியூட்ரான்களும்)

19.ஒரு புரோட்டானின் நிறை அல்லது நியூட்ரானின் நிறை எதற்கு சமம் ? 1amu 

20.amu என்பது தற்போது எந்த குறியீட்டால் குறிக்கப்படுகிறது? -u

21.ஒப்பு  அணு நிறையை எவ்வாறு அழைக்கலாம்?திட்ட அணு எடை 

22.ஒப்பு அணு நிறையின் (RAM)சமன்பாடு என்ன?

Ar =ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை 

             ஒரு C=12 ன் அணு நிறையில் பங்கின் நிறை 

23.அணு நிறையை கணக்கிட கூடிய நவீன முறை எது? நிறை நிறமாலைமானி 

24.அணு எடை என்பது எதை குறிக்கும் ? சராசரி அணு நிறை 

25.கார்பனின் சராசரி அணுநிறை எவ்வளவு =12.011amu 

26.ஆக்சிஜனின் சராசரி அணு நிறை என்ன?15.999amu 

27.நீரின் கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு?18கி 

28.NH3 ன் கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு?17கி 

29.CO2 ன் கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு 44கி 

30.HCL ன் கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு 36.5கி 

31.சல்ப்யூரிக் அமிலத்தின் ஒப்பு மூலக்கூறு நிறை எவ்வளவு? 36.5கி 

32.அணுக்கள்,மூலக்கூறுகளை அளவிட பயன்படும் அலகு எது? மோல்

33.மோல் என்ற சொல் எதனை குறிக்கிறது?துகள்களின் எண்ணிக்கையை 

34.C-12 ஐசோடோப்ப்பில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை சோதனையை சோதனை முறையில் நிர்ணயம் செய்து முன்மொழிந்தவர் யார்?

35. அவகாட்ரா எண்ணின் மதிப்பு என்ன? 6.023* 10^ 23

36.ஒரு மோல் என்பது எவ்வளவு?

Ans.6.023*10^ 23 துகள்கள் 

37.ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு ?

Ans. 32கி 

38.நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறை சதவீதம் எவ்வளவு? 

Ans.H:O =11.11%:88.89%(1:8)

39.மீத்தேனின் (CH4)கார்பன் மற்றும் ஹைட்ரஜன் நிறை சதவீதம் எவ்வளவு?

Ans.C :H 75%:25%

40.மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் அவற்றின் பருமனுக்கும் இடையேயான தொடர்பினை வெளியிட்டவர் யார்?

Ans.அவகாட்ரா (1811)

 41.அவகாட்ரா விதி ______

Ans. V &n  V=மாறிலி*n 

42.அவகாட்ரா விதி யாருடைய விதியை விவரிக்கிறது?

Ans. கே.லூசாக்

43.வாயுக்களின் அணுக்கட்டு எண்ணை கணக்கிட உதவுவது எது? 

Ans.அவகாட்ரா விதி 

44.அணுக்கட்டு எண்ணிற்கான சமன்பாடு என்ன? 

Ans.அணுகட்டு எண் =மூலக்கூறு நிறை /அணு நிறை 

45.ஒரு கிராம் தங்கத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை என்ன?  

Ans.3.42*10^ 21

46.தங்கத்தின் அணு நிறை என்ன?

Ans.198கிராம் 

47.H2SO4 -ல் சல்பரின் சதவீத இயைபு என்ன?

Ans.32.65% 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...