https://drive.google.com/file/d/1icy5crxRArJ63fmc7tRBFGTcLXmivtjR/view?usp=sharing
வேதி வினைகளின் வகைகள்
1.ஒரு வேதி வினையின் வேதி இயைபு,விளைபடு மற்றும் வினைவிளை பொருளின் இயற்பியல் நிலைமை மற்றும் வினை நடைபெறும் சூழ்நிலைகளை குறிக்கும் எளிய குறியீடு ________ சமன்படுத்தப்பட்ட வேதி சமன்பாடு
2.திண்ம பொட்டாசியம் நீருடன் வினைபுரிந்து எதனை தருகிறது?பொட்டாசியம் ஹைட்ராக்சைடு ஹைட்ரஜன் 2k+h2o
3.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைப்படுபொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை______ சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை
4.சேர்க்கை வினையின் வேறு பெயர்கள் என்ன? தொகுப்பு வினை, இயைபு வினை,கூடுகை வினை
5.ஹைட்ரஜன் வாயு குளோரினுடன் இணைந்து ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை தருவது ______ சேர்க்கை வினை H2(g )+cl 2----. 2Hcl
6.வினைப்படு பொருளின் தன்மையை பொறுத்து சேர்க்கை வினைகள் எத்தனை வகைப்படும்? மூன்று
7.ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை ______ சிதைவு வினை
8.சிதைவு வினைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்? மூன்று -வெப்ப சிதைவு வினைகள்,மின்னாற் சிதைவு வினைகள் , ஒளிச் சிதைவு வினைகள்
9.சுண்ணாம்புக் கல்லின் வேதி வாய்ப்பாடு என்ன? CaCo3
10.வினைப்படு பொருள் வெப்பத்தினால் சிதைவுறுவது_______ வெப்பச் சிதைவு வினை
11.மெர்குரி ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது_____ வெப்ப சிதைவு வினை
2Hgo ----->2Hg +O 2
12.வெப்ப கொள் வினைகள் என்பது என்ன? வெப்பத்தை உறிஞ்சும் வினை
13.சில்வர் புரோமைடு மீது ஒளிப்படும் பொழுது, அது சிதைவுற்று சில்வர் உலகத்தையும், புரோமின் வாயுவையும் தருவது ______ வினை - ஒளிச்சிதைவு வினை
14.ஒளி சிதைவு வினையில் மஞ்சள் நிற சில்வர் புரோமைடு எவ்வாறு மாறுகிறது? சாம்பல் நிற சில்வர்
15.சேர்மத்திலுள்ள ஒரு தனிமம் மற்றொரு தனிமத்தால் இடப்பெயர்ச்சி அடைந்து புதிய சேர்மத்தையும், தனிமத்தையும் தருவது _____ வினை - ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகள்
16.ஒற்றை இடப்பெயர்ச்சி வினைக்கு எடுத்துக்காட்டு தருக Fe+Cuso4 =Feso4+Cu
17.இரண்டு சேர்மங்கள் வினைபுரியும் பொது அவற்றின் அயனிகள் பரிமாறிக்கொள்ளும் வினை _____ இரட்டை இடப்பெயர்ச்சி வினை
18.இரட்டை இடப்பெயர்ச்சி வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மெட்டாதிஸிஸ் வினை
19.விளை பொருள் வீழ்படிவாக கிடைக்கும் வினை ______ வீழ்படிவாக்கல் வினை
20.அமிலமும்,காரமும் வினைபுரிந்து உப்பு, நீரை தருவது ________ வினை -நடுநிலையாக்கள் வினை
21.வினைபடு பொருள் சேர்ந்து எரிந்து ஆக்சைடுகளையும் வெப்ப ஆற்றலையும் தருவது ____ வினை - எரிதல் வினை
22.வீடுகளில் சமைக்க எதனை பயன்படுத்துகிறோம்? LPG எனப்படும் திரவமாக்கப்ட்ட வாயு
23.LPG என்பது எந்த வாயுக்களின் கலவையாகும்? புரோபேன், பியூட்டேன்,புரொப்பலீன்
24.மீளா வினைக்கு எடுத்துக்காட்டு எது? எரிதல் வினை
25.காயங்களில் உற்றப்படுவது எது? ஹைட்ரஜன் பெராக்சைடு
26.சோடியம் எதனுடன் வேகமாக வினைபுரிகிறது? ஹைட்ரோகுளோரிக் அமிலம்
27.சோடியம் எதனுடன் மெதுவாக வினைபுரிகிறது?அசிட்டிக் அமிலம்
28.வினைப்படு பொருளின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் என்னவாகும்? அதிகரிக்கும்
29.வெப்பநிலை உயரும் போது வினையின் வேகம் என்னவாகும்? அதிகரிக்கும்
30.அறைவெப்ப நிலையில் கால்சியம் கார்பனேட் எவ்வாறு வினைபுரியும்? மெதுவாக
31.குளிர் சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவு ஏன் கெட்டு போவதில்லை? அறை வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலையை கொண்டுள்ளதால்
32.வினையில் நேரடியாக ஈடுபடாது, ஆனால் அவ்வினையின் வேகத்தை அதிகரிப்பது ______ வினையூக்கி
33.பொட்டாசியம் குளோரேட்டை சூடுபடுத்தும் போது எதனை சேர்ப்பதால் ஆக்சிஜன் வேகமாக வெளியேறுகிறது? மாங்கனீசு டை ஆக்ஸைடு
34.காற்றடைக்கப்ட்ட குளிர்பானங்களில் உள்ள வாயு எது? CO2
35.தூய நீரின் மின்கடத்துத்திறன் என்ன? மின்கடத்தாது
36.நீரின் அயனிப்பெருக்கத்தின் அலகு என்ன -mol 2dm -6
37.அயனிகளின் செறிவு எதனை தீர்மானிக்கிறது? அமிலத்தன்மை (அ)காரத்தன்மை
38.pH என்ற குறியீட்டில் P என்பது எதனைக் குறிக்கும் - Power (Potenz ஜெர்மனியைச்சொல்)
39.pH என்பது யாரால் முன்மொழியப்பட்டது? SPL சாரன்சன் -1909--டென்மார்க்
40.pH அளவீட்டின் மொத்த மதிப்பீடு எவ்வளவு? 0 முதல் 14 வரை
41.அமிலங்களின் pH மதிப்பு என்ன? 7ஐ விட குறைவு
42.காரங்களின் pH மதிப்பு என்ன? 7ஐ விட அதிகம்
43.நடுநிலைக் கரைசலின் pH மதிப்பு என்ன- 7 க்கு சமம்
44.pH என்பது என்ன? pH = log 10 [H+]
45.ஒரு கரைசலின் pH மதிப்பினை கண்டறிய பயன்படுவது எது -பொது நிறங்காட்டி
46.நமது பற்களின் மேற்பரப்பு படலமானது எதனால் ஆனது? கால்சியம் பாஸ்பேட்
47.நமது உடலானது எவ்வளவு வரை உள்ள pH மதிப்பை சார்ந்து வேலை செய்கிறது- 7.0 முதல் 7.8 வரை
48.மனிதனின் இரத்தத்தின் pH மதிப்பு எந்த மதிப்பில் நோய் உண்டாகிறது?-7.35 க்கு கீழ் 7.45 க்கு மேல்
49.இரைப்பையில் உள்ள திரவத்தின் (HCL) தோராயமாக pH மதிப்பு என்ன -2.0
50.மனித உமிழ் நீரின் pH மதிப்பு என்ன? 6.5-7.5 வரை
51.பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) எந்த pH மதிப்பில் பாதிக்கப்படுகிறது? உமிழ்நீரின் pH 5.5 க்கு கீழே உள்ள போது
52.நாம் பயன்படுத்தும் பற்பசை எந்த தன்மை கொண்டது? காரத்தன்மை
53.சிட்ரிக் அமிலத்தன்மை கொண்ட பழங்கள் எந்த மண்ணில் வளரும் -காரத்தன்மை உள்ள மண்ணில்
54.நெல் எந்த மண்ணில் வளரும் -அமிலத்தன்மை கொண்ட மண்ணில்
55.கரும்பு எந்த மண்ணில் வளரும்? நடுநிலைத் தன்மை கொண்ட மண்ணில்
56.மழைநீரின் pH மதிப்பு எவ்வளவு? 7
57.வளிமண்டலக் கற்று சல்பர் டை ஆக்ஸைடு,நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும்போழுத_____ மழை
பொழிகிறது -அமிலமழை pH 7 ஐ விட குறைவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக